ஆப்ப ஆணம் (1)
தேவையான பொருட்கள்:
கடலை பருப்பு - 200 கிராம்.
உருளைக்கிழங்கு - 100 கிராம்.
நீளமாக அரிந்த வெங்காயம் - 50 கிராம்
பொடியாக அரிந்த தக்காளி - 50 கிராம்
இஞ்சி பூண்டு விழுது - 1 தேக்கரண்டி.
மிளகாய் தூள் - 1 1/2 தேக்கரண்டி
பட்டை - சிறு துண்டு
மஞ்சள் தூள் - 1/4 தேக்கரண்டி.
கரம் மசாலா - 1/2 தேக்கரண்டி.
கடைசியில் தூவ கொத்தமல்லித் தழை
எண்ணெய் - 50 மில்லி லிட்டர்
உப்பு - தேவையான அளவு
செய்முறை:
கடலைப் பருப்பை சுமார் 1/2 மணி நேரம் நீரில் ஊற வைக்க வேண்டும்.
ப்ரஷர் குக்கரில், கடலைப் பருப்புடன், உருளைக்கிழங்கை இரண்டு துண்டுகளாக வெட்டி சேர்த்து, மஞ்சள் தூளைக் கலந்து தண்ணீருடன் 5 நிமிடம் ப்ரஷர் குக் செய்ய வேண்டும்.
ப்ரஷர் அடங்கியவுடன், வெந்த உருளைக்கிழங்கையும், கடலைப்பருப்பையும் நன்கு மசித்து வைத்துக் கொள்ள வேண்டும்.
கடாயில் எண்ணெய் ஊற்றி சூடாக்கி, பட்டை சேர்த்து அரிந்து வைத்த வெங்காயத்தை போட்டு, பொன்னிறமானவுடன் தக்காளியை சேர்த்து வதக்க வேண்டும்.
இப்போது இஞ்சிப் பூண்டு கலவையை சேர்த்து, இளஞ்சூட்டில் மணம் வரும் வரை வதக்கி, அதனுடன் மிளகாய்த் தூள் கலந்து கிளர வேண்டும்.
பின்னர் மசித்த கடலைப்பருப்பு, உருளைக் கிழங்கை அதனுடன் கலந்து, 300 மில்லி லிட்டர் நீர் சேர்த்து, ருசிக்கேற்ப உப்பு போட்டு 5 நிமிடம் கொதிக்க வைக்க வேண்டும்.
அடுப்பை அணைத்தபின் கரம் மசாலாத் தூள், கொத்தமல்லித் தழை கலந்து பரிமாறவும்.