அவரைக்காய் புளிக்குழம்பு
தேவையான பொருட்கள்:
அவரைக்காய் - 10
கத்தரிக்காய் - 1
வெங்காயம் - 1
தக்காளி - 1
தக்காளி விழுது (அல்லது) தக்காளி ப்யூரி - 3 தேக்கரண்டி
பச்சை மிளகாய் - 2
மல்லிதழை, கறிவேப்பிலை - சிறிது
வடகம் - 2 தேக்கரண்டி
புளி - நெல்லிக்காய் அளவு
மஞ்சள் தூள் - 1/2 தேக்கரண்டி
மிளகாய் தூள் - 1 தேக்கரண்டி
தனியா தூள் - 2 தேக்கரண்டி
சோம்பு தூள் - 1 தேக்கரண்டி
மிளகு, சீரகத் தூள் - 1 தேக்கரண்டி
எண்ணெய் - தேவையான அளவு
உப்பு - தேவையான அளவு
செய்முறை:
அவரை, கத்தரி, வெங்காயம், தக்காளியை நறுக்கி வைக்கவும். புளியை கரைத்து வைக்கவும்.
ஒரு பாத்திரத்தில் அவரை, கத்தரி, தக்காளி, தக்காளி விழுது, மஞ்சள் தூள், தனியா தூள், மிளகு, சீரகத் தூள், உப்பு, மல்லிதழை போட்டு கலந்து 10 நிமிடம் வேக விடவும்.
பின் புளிக்கரைசலை விட்டு 2 நிமிடம் கொதிக்க விடவும்.
பிறகு ஒரு பாத்திரத்தில் எண்ணெய் விட்டு வெங்காயம் போட்டு வதக்கிய பின் வடகம் சேர்த்து வதக்கவும். சோம்பு தூள், மிளகாய் தூள், கறிவேப்பிலை சேர்த்து தாளிக்கவும்.
தாளித்தவற்றை அவரை குழம்பில் ஊற்றி பரிமாறவும்.
குறிப்புகள்:
இதில் இறால் சேர்த்தால் கூடுதல் ருசி கிடைக்கும்.