அவசர வற்றல் குழம்பு





தேவையான பொருட்கள்:
புளி - எலுமிச்சம்பழ அளவு
சாம்பார்ப் பொடி - 1 1/2 தேக்கரண்டி
மஞ்சள் தூள் - 1/2 தேக்கரண்டி
நல்லெண்ணெய் - 2 மேசைக்கரண்டி
கடுகு - 1/2 தேக்கரண்டி
வெந்தயம் - 1 தேக்கரண்டி
கடலைப்பருப்பு - 2 மேசைக்கரண்டி
மிளகாய் வற்றல் - 5
கறிவேப்பிலை - சில இலைகள்
தேவையான உப்பு
செய்முறை:
புளியை 2 கப் நீரில் ஊறவைத்து கரைத்துக் கொள்ளவும்.
வாணலியில் எண்ணெய் ஊற்றி அது சூடானதும் கடுகைப்போடவும்.
அது வெடித்ததும் வெந்தயம், கடலைப்பருப்பு, கறிவேப்பிலை, மிளகாய் வற்றல் சேர்த்து குறைந்த தீயில் அவை லேசாக சிவக்கும் வரை வதக்கவும்.
புளி நீரையும் சாம்பார் பொடியையும் தேவையான உப்புடன் சேர்த்து கொதிக்க விடவும்.
ஓரளவு கெட்டியானதும் இறக்கி பரிமாறவும்.