அவசர மோர்குழம்பு
0
தேவையான பொருட்கள்:
மோர் - 4 கப்
இஞ்சி - சிறு துண்டு
கடுகு - 1/2 தேக்கரண்டி
உளுத்தம் பருப்பு - சிறிது
கறிவேப்பிலை - 2 கொத்து
மிளகாய் வற்றல் - 2
பெருங்காயத்தூள் - 1/2 தேக்கரண்டி
மஞ்சள் தூள் - 1/2 தேக்கரண்டி
தண்ணீர் - 2 1/2 கப்
கொத்தமல்லித்தழை - சிறிது
எண்ணெய் - 1/2 மேசைக்கரண்டி
கல் உப்பு - 1 1/2 தேக்கரண்டி
செய்முறை:
பாத்திரத்தில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு, உளுத்தம் பருப்பு, கறிவேப்பிலை, இஞ்சி, மிளகாய் வற்றல், பெருங்காயத்தூள், மஞ்சள் தூள் போட்டு தாளிக்கவும்
உப்பு சேர்த்து மோரை கலக்கி அதில் ஊற்றி உடனே அடுப்பை அணைத்து கொத்தமல்லி தழை தூவி பரிமாறவும்