அவசர பருப்பு
தேவையான பொருட்கள்:
துவரம் பருப்பு - 150 கிராம்
சின்ன வெங்காயம் - 7
தக்காளி - 2
மிளகாய் வற்றல் - 2
மஞ்சள் பொடி - 1/2 தேக்கரண்டி
சின்ன வெங்காயம் - 20
தக்காளி - 1/2 தேக்கரண்டி
கடுகு & உளுத்தம் பருப்பு - 1 மேசைக்கரண்டி
கறிவேப்பிலை - 3 கொத்து
மல்லி இலை - 2 மேசைக்கரண்டி
வற்றல் - 2
பெருஞ்சீரகம் - 1/2 தேக்கரண்டி
சீரகம் - 1/2 தேக்கரண்டி
எண்ணெய் - 2 மேசைக்கரண்டி
உப்பு - 2 தேக்கரண்டி
செய்முறை:
வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் மிளகாய் வற்றல், பெருஞ்சீரகம், சீரகம் போட்டு வறுத்து அரைத்துக் கொள்ளவும்.
துவரம் பருப்பு சின்ன வெங்காயம், மஞ்சள் பொடி, தக்காளி எல்லாவற்றையும் ஒன்றாக போட்டு 2 விசில் விடவும்.
எண்ணெய்யை சூடாக்கி கடுகு, உளுத்தம் பருப்பு போட்டு வெடித்ததும் இரண்டு சின்ன வெங்காயங்களைத் தட்டி சேர்த்து, நன்கு சிவந்து வாசனை வந்ததும் கறிவேப்பிலை மிளகாய் வற்றல் சேர்த்து வறுத்து அரைத்த பொடியை பருப்பில் கொட்டி, மல்லி இலையும் தூவி கொதிக்க விட்டு பரிமாறவும்.