அமுக்கு வத்தல் குழம்பு
0
தேவையான பொருட்கள்:
துவரம் பருப்பு - 200 கிராம்
சாம்பார் பொடி - 1 மேசைக்கரண்டி
மஞ்சள் தூள் - 1/2 தேக்கரண்டி
புளி - 1 எலுமிச்சை அளவு
கடுகு - 1/2 தேக்கரண்டி
பெருங்காயம் - சிறிது
கறிவேப்பிலை - 10
அமுக்கு வத்தல் - 6
எண்ணெய் - 1 மேசைக்கரண்டி.
உப்பு - தேவையான அளவு
செய்முறை:
துவரம் பருப்பை மஞ்சள் தூள் சேர்த்து குழைய வேக வைத்து மசிக்கவும்.
1 டம்ளர் தண்ணீரில் புளியைக் கரைத்து வைக்கவும்.
2 டம்ளர் கொதிக்கும் நீரில் அமுக்கு வத்தலை போட்டு 1/2 மணி ஊற வைக்கவும்.
வெந்த பருப்புடன், வத்தல்(தண்ணீரை வடித்து), சாம்பார் பொடி, உப்பு, புளிகரைசல் சேர்த்து கொதிக்க விடவும்.
காய் வெந்ததும், வாணலியில் எண்ணெய் ஊற்றி கடுகு, பெருங்காயம், கறிவேப்பிலை தாளித்து கொட்டி இறக்கி பரிமாறவும்.