அப்பளம் குழம்பு

on on off off off 1 - Ok!
2 நட்சத்திரங்கள் - 1 மதிப்பாய்வின் அடிப்படையில்

தேவையான பொருட்கள்:

அப்பளம் பொரித்தது - 10

கடுகு - சிறிது

பெருங்காயம் - 1/2 தேக்கரண்டி

வெந்தயம் - 1 தேக்கரண்டி

வெங்காயம் - 1/2 கப்

தக்காளி - 3

மஞ்சள் தூள் - சிறிது

மிளகாய் தூள் - 1 தேக்கரண்டி

புளி தண்ணீர் - 1/2 கப்

தேங்காய் விழுது - 1/2 கப்

கறிவேப்பிலை - சிறிது

எண்ணெய் - தேவையான அளவு

உப்பு - தேவையான அளவு

செய்முறை:

கடாயில் எண்ணெய் விட்டு கடுகு, பெருங்காயம், வெந்தயம், வெங்காயம், தக்காளி, உப்பு, மஞ்சள் தூள், மிளகாய் தூள் சேர்த்து எண்ணெய் மிதக்கும் வரை நன்கு வதக்கவும்.

அதில் புளி தண்ணீர் சேர்த்து கொதிக்க விடவும்.

தேங்காய் விழுது சேர்த்து நன்கு கொதிக்க விடவும்.

பொரித்து உடைத்து வைத்த அப்பளம் சேர்க்கவும்.

பிறகு கறிவேப்பிலை சேர்த்து பரிமாறவும்

குறிப்புகள்: