ஸ்டஃப்டு கத்தரிக்காய்

on on off off off 2 - Ok!
2 நட்சத்திரங்கள் - 2 மதிப்பாய்வின் அடிப்படையில்

தேவையான பொருட்கள்:

பிஞ்சு கத்தரிக்காய் - 1/4 கிலோ கிராம்

சிறிய வெங்காயம் - 10

இஞ்சி - 1/2 இஞ்ச்

பூண்டு - 5 பல்

சிவப்பு மிளகாய் - 3

சோம்பு - 1 தேக்கரண்டி

கசகசா - 1/2 தேக்கரண்டி

பட்டை - 1 இஞ்ச்

கிராம்பு - 2

கடுகு - சிறிதளவு

உளுந்து - சிறிதளவு

எண்ணெய் - 1/4 கப்

உப்பு - தேவையான அளவு

செய்முறை:

வெங்காயம், இஞ்சி, பூண்டு, மிளகாயை எண்ணெய் ஊற்றி வதக்கவும்.

அத்துடன் சோம்பு, கசகசா, பட்டை, கிராம்பு சேர்த்து அரைத்துக் கொள்ளவும்.

கத்தரிக்காயை சுத்தம் செய்து மேலும் கீழும் சிறிது இடம் விட்டு கீறி அதில் அரைத்த விழுதை வைக்கவும்.

வாணலியில் சிறிது எண்ணெய் ஊற்றி கடுகு, உளுந்து தாளித்து, கத்தரிக்காயை போட்டு வதக்கி எடுத்தால் ஸ்டஃப்டு கத்தரிக்காய் ரெடி.

குறிப்புகள்: