வெண்டை மொச்சை புளி மண்டி
தேவையான பொருட்கள்:
வெண்டைக்காய் - 1/4 கிலோ
மொச்சை பயறு - 100 கிராம்
சின்ன வெங்காயம் - 100 கிராம்
தக்காளி - 2
பச்சை மிளகாய் - 7
மஞ்சள் பொடி - 1 தேக்கரண்டி
புளி - ஒரு எலுமிச்சையளவு
கடுகு - 1 தேக்கரண்டி
சோம்பு - 1/2 தேக்கரண்டி
சீரகம் - 1/2 தேக்கரண்டி
வெந்தயம் - 1/2 தேக்கரண்டி
மல்லி விதை - 1தேக்கரண்டி
கறிவேப்பிலை - இரண்டு கொத்து
எண்ணய் - 3 மேசைக்கரண்டி
உப்பு - தேவையான அளவு
செய்முறை:
மொச்சை பயரை வாசனை வர வறுத்து ஒரு டம்ளர் தண்ணிர் ஊற்றி,அரை டீ ஸ்பூன் உப்பு சேர்த்து குக்கரில் வேக வைக்கவும்.
தண்ணீரை வடிக்க வேண்டாம்.
வெண்டைக்காயை அரை அங்குலத் துண்டுகளாக நறுக்கவும்.
சி. வெங்காயத்தை தோலுரித்து இரண்டிரண்டாகவும், தக்காளிகளை நான்காகவும் நறுக்கவும்.
மிளகாயை வாய் பிளந்து வைக்கவும்.
மல்லி விதை, வெந்தயம், சீரகம், சோம்பை எண்ணை விடாமல் வறுத்து பொடிக்கவும்.
புளியை ஒரு டம்ளர் தண்ணீரில் கரைத்து வடிகட்டி வைக்கவும்.
அடுப்பில் கடாயை வைத்து எண்ணை ஊற்றாமல் வெண்டைக்காய் துண்டுகளைப் போட்டு வதக்கவும். சிறிது நேரத்தில் அதிலுள்ள ஈரமெல்லாம் போய் நன்றாக வறண்ட உடன் இறக்கவும்.
வேறு வாணலியில் எண்ணை ஊற்றி கடுகு போட்டு வெடித்ததும் சி. வெங்காயம் போட்டு வதக்கவும்.
பாதி வதங்கியதும் மிளகாய், வெண்டைக்காய் சேர்க்கவும்.
மூன்று நிமிடம் கழித்து தக்காளி, மஞ்சள் பொடி சேர்த்து வதக்கவும்.
நான்கு நிமிடம் கழித்து புளிக் கரைசல், மொச்சை, ஒரு டேபிள் ஸ்பூன் உப்பு, பொடித்த பொடி சேர்த்து பத்து நிமிடம் கொதிக்க வைத்து இறக்கி பரிமாறவும்.