வெண்டைக்காய் பருப்பு பச்சடி
தேவையான பொருட்கள்:
வெண்டைக்காய் - 1/4 கிலோ
துவரம் பருப்பு - 100 கிராம்
சின்ன வெங்காயம் - 50 கிராம்
தக்காளி - 2
பச்சை மிளகாய் - 5
புளி - பெரிய நெல்லிக்காயளவு
மஞ்சள் பொடி - 1 தேக்கரண்டி
கடுகு, உளுத்தம் பருப்பு - 1 மேசைக்கரண்டி
சோம்பு - 1 தேக்கரண்டி
கறிவேப்பிலை - இரண்டு கொத்து
எண்ணெய் - 3 தேக்கரண்டி
உப்பு - தேவையான அளவு
செய்முறை:
புளியை ஐம்பது மில்லி தண்ணீரில் ஊற வைத்து கரைத்து வடிகட்டி கொள்ளவும்.
பருப்பில் மஞ்சள் பொடி சேர்த்து நூறு மில்லி தண்ணீரில் மலர வேக வைக்கவும்.
வெண்டைக்காய் பொடியாகவும், பச்சை மிளகாய், வெங்காயத்தை நீளமாகவும், தக்காளியை சற்று பெரிய துண்டுகளாகவும் நறுக்கி வைக்கவும்.
அடுப்பில் கடாயை வைத்து இரண்டு டீஸ்பூன் எண்ணெய் ஊற்றி சோம்பை லேசாக தட்டிப் போட்டு வெங்காயம், மிளகாய் போட்டு வதக்கவும்.
பின் வெண்டைக்காய் சேர்த்து வதக்கவும்.
பச்சை வாசனை போனதும் தக்காளி சேர்த்து வதக்கி மூன்று நிமிடம் கழித்து உப்பு போட்டு புளி ஊற்றவும்.
காய் வெந்ததும் பருப்பு சேர்த்து மேலும் ஐந்து நிமிடம் கொதிக்க விட்டு இறக்கவும்.
அடுப்பில் சிறிய கடாயை வைத்து மீதமுள்ள எண்ணெய் ஊற்றி கடுகு, உளுத்தம் பருப்பு தாளித்து கறிவேப்பிலை போட்டு தாளித்து பச்சடியில் ஊற்றி மூடி வைக்கவும்.