வெஜிடபுள் குழி பணியாரம்
0
தேவையான பொருட்கள்:
இட்லி தோசை மாவு - 1 கப்
விரும்பிய காய்கறிகள் - 1/4 கப்
எண்னெய் - 2 தேக்கரண்டி
உப்பு - தேவையான அளவு
தாளிக்க:
எண்ணெய் - 1/2 தேக்கரண்டி
கடுகு - 1/4 தேக்கரண்டி
மிளகாய் வற்றல் - 1
கறிவேப்பிலை - கொஞ்சம்
செய்முறை:
காய்கறிகள்: பீன்ஸ், பட்டாணி, கேரட், வெங்காயம்.
முதலில் காய்களை ஐந்து நிமிடம் வதக்கி கொள்ளவும்.
மாவில் வதக்கிய காய்கறிகளை போட்டு நன்றாக கலக்க வேண்டும். மாவு இட்லி மாவு பதமாக இருந்தால் நன்றாக சாஃப்டாக வரும்.
குழி பணியார கடாயில் முதலில் கொஞ்சம் எண்னெய் விட்டு அதில் ஒரு சின்ன கரண்டி மாவை குழிகளில் விடவும்.
சிவக்க வந்தவுடன் அதை திருப்பி போட்டு சிவக்க வந்தவுடன் எடுக்கவும்.
சூடாக சட்னியுடன் பரிமாறவும். தாளிக்காமலும் செய்யலாம். வேண்டுமென்றால் தாளிக்கலாம்.