வெங்காய புளி மண்டி
தேவையான பொருட்கள்:
சின்ன வெங்காயம் - 100 கிராம்
புளி - ஒரு பெரிய எலுமிச்சையளவு
மஞ்சள் பொடி - 1 தேக்கரண்டி
வரமிளகாய் - 3
பச்சை மிளகாய் - 3
பெருங்காயத்தூள் - 1/2 தேக்கரண்டி
கடுகு, உளுத்தம் பருப்பு - 1 மேசைக்கரண்டி
வெந்தயம் - 1/2 தேக்கரண்டி
சோம்பு - 1/2 தேக்கரண்டி
கறிவேப்பிலை - இரண்டு கொத்து
கெட்டியான அரிசி கழுவிய நீர் - முன்னூறு மில்லி
எண்ணெய் - 2 மேசைக்கரண்டி
உப்பு - தேவையான அளவு
செய்முறை:
முதலில் புளியை அரிசி கழுவிய நீரில் ஊற வைத்துக் கரைத்து வடிகட்டி வைக்கவும்.
சின்ன வெங்காயம், பச்சை மிளகாயை குறுக்கில் இரண்டாக நறுக்கவும்.
வரமிளகாயை கிள்ளி வைக்கவும்.
அடுப்பில் கடாயை வைத்து எண்ணெய் ஊற்றி வரமிளகாய், கடுகு, உளுத்தம் பருப்பு, வெந்தயம், சோம்பு போட்டு வெடித்ததும் பெருங்காயம் போடவும்.
இரண்டு நிமிடம் கழித்து வெங்காயம், பச்சை மிளகாய், மஞ்சள் பொடி, உப்பு சேர்க்கவும்.
நன்கு வதங்கியதும் புளிக்கரைசலை ஊற்றி பத்து நிமிடம் நன்கு கொதித்ததும் இறக்கி பரிமாறவும்.