வாழைப்பூ தனி பஜ்ஜி
தேவையான பொருட்கள்:
வாழைப்பூ - 35 என்னம் (நரம்பு, கண்ணாடி இழையை எடுத்து வைக்கவும்)
சீரகத்தூள் - 1/2 தேக்கரண்டி
மிளகுத்தூள் - 1/2 தேக்கரண்டி
கடலை மாவு - 1/2 கப்
பச்சரிசி மாவு - 1 தேக்கரண்டி
சிவப்பு மிளகாய் தூள் - 1 தேக்கரண்டி (காரத்திற்கேற்ப அளவை மாற்றிக்கொள்ளலாம்.)
சோடா மாவு - 2 சிட்டிகை
சோம்பு - 1/2 தேக்கரண்டி
பொட்டுக்கடலை - 2 தேக்கரண்டி
உப்பு - தேவையான அளவு
செய்முறை:
வாழைப்பூவை சுத்தம் செய்து நறுக்காமல் கொதிக்கும் நீரில் போட்டு 3 நிமிடம் வேகவைக்கவும்.
சோம்பு,பொட்டுக்கடலையை நைசாக அரைக்கவும்.
கடலைமாவு,பச்சரிசிமாவு,சோடாமாவை சலித்து அதில் அரைத்த கலவையை கொட்டி,சிவப்பு மிளகாய் தூள்,உப்பு,சீரகத்தூள், மிளகுத்தூள் கலந்து தண்ணீர் விட்டு கரைக்கவும்.
அதில் வேகவைத்த வாழைப்பூவை போட்டு பஜ்ஜி போல பிரட்டி காயவைத்த எண்ணையில் போட்டு பொரித்து எடுக்கவும்.