வாழைப்பூ கோலா உருண்டை
தேவையான பொருட்கள்:
வாழைப்பூ - 1
தேங்காய் - 1 மூடி
பொட்டுக்கடலை - 2 கப்
பெரிய வெங்காயம் - 2
சோம்பு - 2 தேக்கரண்டி
காய்ந்த மிளகாய் - 6
பூண்டு - 4 பல்
இஞ்சி - சிறிது
எண்ணெய் - பொரிப்பதற்கு
உப்பு - தேவையான அளவு
செய்முறை:
தேவையான பொருட்களை தயாராக வைத்துக் கொள்ளவும்.
வெங்காயம், இஞ்சி, பூண்டு இவற்றை பொடியாக நறுக்கவும். தேங்காயை துருவி வைக்கவும். வாழைப்பூவை நரம்பு, கண்ணாடி நீக்கி, பொடியாக நறுக்கி, மோர் கலந்த தண்ணீரில் போட்டு வைக்கவும்.
வாணலியில் 1 மேசைக்கரண்டி எண்ணெய் விட்டு, சோம்பையும், காய்ந்த மிளகாயையும் போடவும். சிவந்தவுடன் நறுக்கிய வெங்காயம், பூண்டு, இஞ்சி சேர்த்து வதக்கவும்.
வெங்காயம் வதங்கியதும், வாழைப்பூவை தண்ணீரை பிழிந்து விட்டு, அதில் சேர்த்து வதக்கவும்.
வாழைப்பூ நன்கு வதங்கியதும், துருவிய தேங்காய் சேர்த்து நன்கு வதக்கவும்.
வதங்கிய பின் இறக்கி ஆற விடவும்.
நன்கு ஆறிய பின், உப்பு, பொட்டுக்கடலை சேர்த்து கெட்டியாக, நைசாக மிக்ஸியிலோ, கிரைண்டரிலோ அரைக்கவும்.
அரைத்த விழுதை கையில் சிறிது எண்ணெய் தொட்டுக் கொண்டு எழுமிச்சம் பழ அளவு உருண்டைகளாக உருட்டி வைக்கவும்.
வாணலியில் எண்ணெய் விட்டு நன்கு காய்ந்தவுடன், உருட்டி வைத்த உருண்டைகளை ஐந்து அல்லது ஆறாக போடவும்.
நன்கு சிவக்க விட்டு பொரித்து எடுக்கவும்.