வாழைக்காய் வறுவல்

off off off off off 0

தேவையான பொருட்கள்:

சிறிய வாழைக்காய் - 3

கறிவேப்பிலை - இரண்டு கொத்து

எண்ணெய் - 3 மேசைக்கரண்டி

அரைக்க:

சோம்பு - 1 தேக்கரண்டி

பூண்டு - 3 பல்

சின்ன வெங்காயம் - 2

மிளகாய் தூள் - 1 மேசைக்கரண்டி

மஞ்சள் பொடி - 1/2 தேக்கரண்டி

உப்பு - தேவையான அளவு

செய்முறை:

அரைக்க வைத்துள்ளவற்றை விழுதாக அரைக்கவும். வாழைக்காயை தோல் நீக்கி சற்று கனமான துண்டுகளாக நறுக்கவும்.

அரைத்த விழுதை வாழைக்காய்த் துண்டுகளில் பிரட்டி பதினைந்து நிமிடம் ஊற வைக்கவும்.

அடுப்பில் கடாயை வைத்து எண்ணெய் ஊற்றி கறிவேப்பிலை போட்டு வாழைக்காய் துண்டுகளை போட்டு பிரட்டவும்.

அடுப்பை சிம்மில் வைத்து அடிக்கடி கிளறி பத்து நிமிடம் வேக வைக்கவும்.

நன்றாக வெந்து சிவந்ததும் இறக்கி பரிமாறவும்.

குறிப்புகள்: