வாழைக்காய் புட்டு
0
தேவையான பொருட்கள்:
வாழைக்காய் - 3
வெங்காயம் - 1
மிளகாய் - 3
தேங்காய்ப்பூ - 1 கப்
எண்ணெய் - 2 தேக்கரண்டி
உப்பு - தேவையான அளவு
தாளிக்க:
கடுகு, உளுத்தம் பருப்பு - 1 தேக்கரண்டி
செய்முறை:
வாழைக்காயை இரண்டாக நறுக்கி தண்ணீரில் வேகவிடவும். தோலை உரித்துவிட்டு, உதிர்த்துக்கொள்ளலாம் [அ] துருவிக்கொள்ளலாம்.
ஒரு கடாயில் எண்ணெய் விட்டு கடுகு, உளுத்தம் பருப்பு தாளித்து பொடியாக நறுக்கிய வெங்காயம், கிள்ளிய மிளகாயைப்போட்டு, வாழைக்காயைப் போட்டு கிளறி தேங்காய்ப்பூ சேர்த்து கிளறவும்.