வாழைக்காய் கோலா

off off off off off 0

தேவையான பொருட்கள்:

வாழைக்காய் - 2

தேங்காய் துருவல் - 1/2 மூடி

சோம்பு - 1 தேக்கரண்டி

கசகசா - 1 தேக்கரண்டி

தனியா - 1 தேக்கரண்டி

சின்ன வெங்காயம் - 8

இஞ்சி - 1/2 அங்குலம்

பச்சை மிளகாய் - 6

பூண்டு - 3 பல்

பட்டை - 1 துண்டு

கறிவேப்பிலை - 1 இனுக்கு

எண்ணைய் - 2 தேக்கரண்டி

உப்பு - தேவையான அளவு

செய்முறை:

வாழைக்காயை தோலுடன் வேகவைக்கவும்.வெந்தபின் தோலை உரித்து கையால் /கத்தியால் துண்டாக்கவும்.

தேங்காய் துருவல், சோம்பு, கசகசா, தனியா, பச்சை மிளகாய், பூண்டு, பட்டை, வெங்காயம், இஞ்சி, உப்பு சேர்த்து கெட்டியாக அரைக்கவும்.

இதனுடன் வாழைக்காயையும் நைசாக அரைக்கவும்.

அரைத்ததை சிறு சிறு வடைகளாக தட்டி எண்ணையில் போட்டு பொரித்து எடுக்கவும்.

குறிப்புகள்:

மொத்தம் 25 என்னம் கிடைக்கும்.