முழுக்கோழி பொரியல்
0
தேவையான பொருட்கள்:
கோழி - 1
தயிர் - 2 மேசைக்கரண்டி
எலுமிச்சம் பழம் - 1
மிளகாய் தூள் - 1 தேக்கரண்டி
மிளகுத்தூள் - 1 தேக்கரண்டி
இஞ்சி - ஒரு அங்குலம்
பூண்டு - 1
சிகப்பு பவுடர் - 1/4 தேக்கரண்டி
எண்ணெய் - பொரிப்பதற்கு
உப்பு - தேவையான அளவு
செய்முறை:
கோழியைத் தோல் தேவையற்ற பாகங்களை நீக்கி, முழுக் கோழியாக சுத்தம் செய்து எடுத்துக் கொள்ளவும்..
தயிரில் இஞ்சி பூண்டு விழுது, மிளகாய் தூள், மிளகுத் தூள், சிகப்பு பவுடர், எலுமிச்சம் பழச்சாறு சேர்த்து நன்கு கலக்கி, உரித்த முழுக் கோழியின் மீது நன்கு தடவவும்.
அனைத்து பாகங்களிலும் மசாலா படுமாறு நன்றாக தடவி, மீதம் உள்ள மசாலாவினை அதன் மேல் ஊற்றி சுமார் 2 மணி நேரம் ஊற வைக்கவும்.
ஒரு பெரிய வாணலியில் முக்கால் பாகம் எண்ணெய் விட்டு, சூடேறியதும் முழுக் கோழியினை போட்டு நன்றாக வெந்த பிறகு எடுக்கவும்.