முருங்கைக்காய் கூட்டு

off off off off off 0

தேவையான பொருட்கள்:

முருங்கைக்காய் - 5

துவரை பருப்பு - 50 கிராம்

சின்ன வெங்காயம் - 50 கிராம்

பச்சை மிளகாய் - 2

பூண்டு - 3 பல்

மஞ்சள் பொடி - 1 தேக்கரண்டி

கடுகு & உளுந்து - 1 மேசைக்கரண்டி

கறிவேப்பிலை - இரண்டு கொத்து

வர மிளகாய் - 5

மல்லி விதை - 1 மேசைக்கரண்டி

சீரகம் - 1 தேக்கரண்டி

சோம்பு - 1 தேக்கரண்டி

தேங்காய் துருவல் - 2 மேசைக்கரண்டி

எண்ணை - 2 மேசைக்கரண்டி

உப்பு - தேவையான அளவு

செய்முறை:

முதலில் முருங்கைக்காயை ஒரு அங்குல அளவிற்கு நறுக்கி வைக்கவும்.

வரமிளகாய், மல்லி, சோம்பு, சீரகம் ஆகியவற்றை பத்து நிமிடம் தண்ணீரில் நனைத்து வைத்து இரண்டு டீ ஸ்பூன் உப்பு சேர்த்து விழுதாக அரைக்கவும்.

வெங்காயத்தை இரண்டாக நீளவாக்கில் நறுக்கவும்.

ப. மிளகாயை கீறியும், பூண்டுப் பல்லை தட்டியும் வைக்கவும்.

ஒரு டம்ளர் தண்ணீரில் அரைத்த மிளகாய் விழுதைப் போட்டு கரைத்து வைக்கவும்.

தேங்காயை விழுதாக அரைக்கவும்.

மஞ்சள் பொடி, து. பருப்பை முன்னூறு மி.லி தண்ணீர் விட்டு வேக வைக்கவும்.

பருப்பு முக்கால் வேக்காடு வெந்ததும் காய், பூண்டு, மசாலாக் கரைசலை ஊற்றி காய் வேகும் வரை வேக விடவும்.

அடுப்பில் வாணலியை வைத்து எண்ணை ஊற்றி கடுகு & உளுந்து தாளித்து வெங்காயம், ப.மிளகாய் சேர்த்து பச்சை வாசனை போக வதக்கவும்.

பின் கறிவேப்பிலை சேர்த்து ஒரு நிமிடம் கழித்து காய் கலவையை ஊற்றி ஐந்து நிமிடம் கொதித்ததும் தேங்காய் சேர்த்து மூன்று நிமிடம் கழித்து இறக்கி பரிமாறவும்.

குறிப்புகள்: