முட்டைக்கோஸ் கூட்டு
தேவையான பொருட்கள்:
முட்டைக்கோஸ் - 1/4 கிலோ
கடலைப்பருப்பு - 50 கிராம்
சின்ன வெங்காயம் - 50 கிராம்
பச்சை மிளகாய் - 4
மஞ்சள் பொடி - 1 தேக்கரண்டி
பூண்டு - 2 பல்
கடுகு & உளுந்து - 1 மேசைக்கரண்டி
கறிவேப்பிலை - இரண்டு கொத்து
எண்ணை - 1 1/2 மேசைக்கரண்டி
உப்பு - தேவையான அளவு
பொடிக்க:
மல்லி விதை - 1/2 தேக்கரண்டி
சோம்பு - 1/2 தேக்கரண்டி
செய்முறை:
கடலை பருப்பை கழுவி மஞ்சள் பொடி சேர்த்து ஒரு டம்ளர் தண்ணீர் விட்டு வேக வைக்கவும்.
முட்டக்கோஸை பொடியாக நறுக்கி வைக்கவும்.
சின்ன வெங்காயம், மிளகாய் பொடியாக வெட்டவும்.
பொடிக்க வைத்துள்ளவற்றை வாசனை வர வறுத்து பொடிக்கவும்.
பருப்பு முக்கால் வேக்காடு வெந்ததும் கோஸ், உப்பு சேர்க்கவும்.
காய் அரை வெக்காடு வெந்ததும் இறக்கவும்.
அடுப்பில் வானலியை வைத்து ஒரு டேபிள் ஸ்பூன் எண்ணை ஊற்றி வெங்காயம், மிளகாய் வதக்கவும்.
பின் காய் கலவையை கொட்டி, பூண்டுப் பல்லை தட்டி சேர்த்து கொதிக்க விடவும்.
இரண்டு நிமிடம் கழித்து வறுத்த பொடி சேர்த்து மேலும் ஐந்து நிமிடம் கொதிக்க வைக்கவும்.
எல்லாம் சேர்ந்து நன்றாக வெந்து கொதித்ததும் இறக்கவும்.
அடுப்பில் சிறிய கடாயை வைத்து மீதமுள்ள எண்ணை ஊற்றி கடுகு & உளுந்து தாளித்து, இரண்டு சின்ன வெங்காயம் தட்டிப் போட்டு சிவந்ததும் கறிவேப்பிலை சேர்த்து கூட்டில் கொட்டி இறுக மூடி வைக்கவும்.