மாங்காய் பச்சடி
1 - Excellent!
5 நட்சத்திரங்கள் - 1 மதிப்பாய்வின் அடிப்படையில்
தேவையான பொருட்கள்:
மாங்காய் (பெரிய பெரிய துண்டங்களாக்கியது) - 1
சர்க்கரை - 1 தேக்கரண்டி
பச்சைமிளகாய் (நீளமாக கீரியது) - 2
கடுகு - தாளிக்க
எண்ணைய் - தாளிக்க தேவையான அளவு
உப்பு - தேவையான அளவு
செய்முறை:
வாணலியில் எண்ணைய் ஊற்றி கடுகு தாளிக்கவும்.
இதனுடன் பச்சைமிளகாய் போட்டவுடன் மாங்காய் துண்டங்களைப் போடவும்.
கிளறிவிடவும் வெந்தது போன்ற தோற்றம் தரும் அதாவது நிறம் மாறி வரும் சமயத்தில் உப்பு, சர்க்கரையை சேர்த்து, சர்க்கரை கரைந்து மாங்காயில் ஒட்டி வரும் வரை சமைக்கவும்.