மாங்காய் இனிப்பு பச்சடி

off off off off off 0

தேவையான பொருட்கள்:

பழுத்த மாங்காய் - 1 (தோல் நீக்கி சிறு துண்டுகளாக நறுக்கி வைத்துக்கொள்ளவும்)

அச்சு வெல்லம் - 1 அல்லது 2 (பொடித்து வைத்துக்கொள்ளவும்)

தாளிக்க:

எண்ணெய் - 2 மேசைக்கரண்டி

கடுகு - சிறிது

உளுந்து - சிறிது

வரமிளகாய் - 1 அல்லது 2

கறிவேப்பிலை - சிறிது

செய்முறை:

முதலில் வானலியில் எண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு, உளுந்து, வரமிளகாய், கறிவேப்பிலை தாளித்து பின் நறுக்கிய மாங்காய் துண்டுகளைப் போட்டு நன்றாக வதக்கவும்.

மாங்காய் முக்கால் பாகம் வெந்தவுடன் பொடித்த வெல்லதை சேர்க்கவும். வெல்லம் கரைந்தவுடன் அடுப்பில் இருந்து இறக்கி பரிமாறவும்.

குறிப்புகள்: