மனகோலம்
தேவையான பொருட்கள்:
பாசிப்பருப்பு - 4 ஆழாக்கு (3/4 கிலோ)
பொட்டுக்கடலை - ஒரு ஆழாக்கு (200 கிராம்)
தேங்காய் - ஒரு மூடி
வெல்லம் - 4 ஆழாக்கு (3/4 கிலோ)
டால்டா - 3/4 கிலோ
சர்க்கரை - ஒரு ஆழாக்கு (200 கிராம்)
நெய் - 2 ஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
செய்முறை:
பாசிப்பருப்பை வறுத்து மிஷினில் அரைத்து சலிக்கவும். தேங்காயை மிகப்பொடியாக நறுக்கி ஒரு தேக்கரண்டி நெய் விட்டு வதக்கி எடுத்து கொள்ளவும்.
மறுபடியும் ஒரு தேக்கரண்டி நெய் விட்டு பொட்டுக்கடலையை சிறு தீயில் வறுத்து கொள்ளவும்.
பாசிப்பருப்பு மாவுடன் தேவையான உப்பு போட்டு தண்ணீர் சிறிது விட்டு பிசையவும்.
கடாயில் டால்டாவை சூடாக்கி மாவை முறுக்கு அச்சில் போட்டு பிழிந்து வெந்தது எடுக்கவும். எல்லாவற்றையும் பிழிந்து எடுத்து கையால் உதிர்த்து விடவும்.
அதனுடன் வதக்கிய தேங்காய், பொட்டுக்கடலை ஆகியவற்றை ஒரு தட்டில் கொட்டி பரப்பி கொள்ளவும்.
வெல்லத்தில் சிறிது தண்ணீரை தெளித்து பாகாக்கி மனகோலத்தில் கொட்டி கரண்டியால் கிளறி, சர்க்கரையை பொடித்து தூவி அப்படியே காயவிடவும்.
குறிப்புகள்:
இதை ஏர்டைட் கன்டெய்னரில் போட்டு மூடி வைத்து கொள்ளலாம்.