மட்டன் முட்டை சாப்ஸ்

on off off off off 1 - Poor!
1 நட்சத்திரங்கள் - 1 மதிப்பாய்வின் அடிப்படையில்

தேவையான பொருட்கள்:

மட்டன் - 500 கிராம்

முட்டை - 4

மிளகு தூள் - 2 தேக்கரண்டி

எண்ணெய் - 100 கிராம்

உப்பு - தேவையான அளவு

-------------------

அரைக்க வேண்டியவை:

-------------------

மிளகாய் - 12

மிளகு - 1 தேக்கரண்டி

சோம்பு - 1 தேக்கரண்டி

சீரகம் - 1 தேக்கரண்டி

கசகசா - 1/2 தேக்கரண்டி

பூண்டு - 6 பல்

இஞ்சி - சிறிது

பட்டை - 1

கிராம்பு - 1

ஏலக்காய் - 1

தேங்காய் - 2 சில்

மஞ்சள் தூள் - சிறிதளவு

செய்முறை:

மட்டனை சாப்ஸ் போல் வெட்டிக்கொள்ளவும். அரைத்தவற்றை மட்டனில் தடவி அரை மணி நேரம் ஊற வைக்க வேண்டும்.

குக்கரில் மட்டனை போட்டு உப்பு, சிறிது தண்ணீர் சேர்த்து 7 விசில் வைத்து வேக விட வேண்டும். பிரஷ்ர் அடங்கியவுடன் திறந்தால் சிறிது நீர் இருக்கும். அவற்றை அப்படியே அடுப்பில் வைத்து கிளற வேண்டும்.

வேறு ஒரு பாத்திரத்தில் 4 முட்டையை போட்டு உப்பு, மிளகுத்தூள் சேர்த்து நன்கு அடிக்க வேண்டும்.

ஒரு வாணலியில் சிறிது எண்ணெய் விட்டு கறியை முட்டையில் நனைத்து போட வேண்டும். உடனே திருப்பி போட்டு எடுக்க வேண்டும். ஒரு முறைக்கு 3 அல்லது 4 கறியை போட்டு பொரித்து எடுக்க வேண்டும்.

குறிப்புகள்: