மசாலா சீயம்

off off off off off 0

தேவையான பொருட்கள்:

பச்சரிசி - 3 ஆழாக்கு

உளுந்து - 2 ஆழாக்கு

வெங்காயம் - 3

பச்சை மிளகாய் - 5

கறிவேப்பிலை - மூன்று கொத்து

பூண்டு - 2 பல்

இஞ்சி - சிறிய துண்டு

கடுகு, உளுத்தம் பருப்பு - 1 மேசைக்கரண்டி

தேங்காய் துருவல் - 2 மேசைக்கரண்டி

எண்ணெய் - பொரிக்க தேவையான அளவு

உப்பு - தேவையான அளவு

செய்முறை:

பச்சரிசி, உளுந்தினை மூன்று மணி நேரம் ஊற வைக்கவும்.வெங்காயம், மிளகாய், கறிவேப்பிலையை பொடியாக நறுக்கி வைக்கவும்.

பூண்டு, இஞ்சியை நைசாக தட்டி வைக்கவும். அரிசி, உளுந்தை உப்பு சேர்த்து இட்லி மாவு பதத்திற்கு அரைக்கவும்.

அடுப்பில் ஒரு கடாயை வைத்து ஒரு டேபிள் ஸ்பூன் எண்ணெய் ஊற்றி கடுகு, உளுத்தம் பருப்பு தாளிக்கவும்.

பின் வெங்காயம், கறிவேப்பிலை, மிளகாயைப் போட்டு வதக்கவும். இஞ்சி, பூண்டு போடவும்.

நன்கு வதங்கியதும் இறக்கி மாவில் கொட்டி கலக்கவும். தேங்காய் துருவல் சேர்க்கவும்.

அடுப்பில் வாணலியை வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் நுனி விரல்களால் உருண்டைகளாக எடுத்துப் போடவும்.

பொன்னிறமானதும் எடுத்து எண்ணெய் உறிஞ்சும் தாளில் சுற்றி தட்டில் அடுக்கவும்.

குறிப்புகள்: