பால் பணியாரம் (1)
0
தேவையான பொருட்கள்:
பச்சரிசி - ஒரு ஆழாக்கு
உளுந்து - ஒரு ஆழாக்கு
பால் - ஒரு லிட்டர்
சர்க்கரை - தேவையான அளவு
ஏலக்காய் - 6
எண்ணெய் - தேவையான அளவு
செய்முறை:
அரிசியையும், உளுந்தையும் கழுவி தண்ணீரை வடித்துவிட்டு ஒரு மணி நேரம் ஊறவைக்க வேண்டும்.
பிறகு நன்கு மைய கையில் கிள்ளும் அளவிற்கு [அ] கொட்டாங்குச்சியில் மூன்று கண்ணில் ஒன்றில் ஓட்டை போட்டு அதில் மாவை ஊற்றி எண்ணெயில் விடும் அளவிற்கு ஆட்ட வேண்டும்.
ஒரு கடாயில் எண்ணெய் விட்டு பணியாரங்களை வேகவிட்டு வடித்து எடுக்கவேண்டும்.
பாலைக்காய்ச்சி ஏலக்காய் தட்டிப்போட்டு, சர்க்கரை கரைய வைக்கவேண்டும்.
சாப்பிடும் முன் கொதிக்கும் வெந்நீரில் பணியாரங்களைப் போட்டு வடிகட்டியில் நீரை வடித்துவிட்டு பாலில் கொட்டிய ஒரு நிமிடத்தில் ஊறிவிடும்.
பாலுடன் கப்பில் போட்டு ஸ்பூனில் எடுத்து சாப்பிட சுவையானது.