பாசிப்பருப்பு தோசை
0
தேவையான பொருட்கள்:
பாசிப்பருப்பு – 200 கிராம்
பச்சரிசி – 50 கிராம்
பெருங்காயம் – 1/4 தேக்கரண்டி
வரமிளகாய் – 2
தேங்காய் துருவல் – 2 மேசைக்கரண்டி
சின்ன வெங்காயம் – 50 கிராம்
கறிவேப்பிலை – ஒரு கொத்து
எண்ணெய் – 5 மேசைக்கரண்டி
உப்பு – தேவையான அளவு
செய்முறை:
பருப்பையும், அரிசியையும் ஒரு மணி நேரம் ஊற வைத்து பெருங்காயம், உப்பு, மிளகாய், தேங்காய் துருவல் எல்லாம் சேர்த்து பொடி ரவை பதத்திற்கு அரைத்துக் கொள்ளவும்.
சின்ன வெங்காயத்தயும், கறிவேப்பிலையையும் பொடியாக நறுக்கி மாவில் சேர்த்து கலக்கவும்.
அடுப்பில் தோசைக்கல்லை வைத்து சூடானதும் ஒரு கரண்டி மாவை ஊற்றி தோசை போல் மெல்லியதாகப் பரப்பி சுற்றி எண்ணெய் விடவும்.
சிவந்ததும் திருப்பிப்போட்டு மறுபுறமும் வெந்ததும் எடுக்கவும்.