பாகற்காய் புளிக்குழம்பு
தேவையான பொருட்கள்:
பெரிய பாகற்காய் - 2
சின்ன வெங்காயம் - 50 கிராம்
தக்காளி - 2
பூண்டு - 5 பல்
பச்சை மிளகாய் - இரண்டு
மிளகாய்த்தூள் - 1 மேசைக்கரண்டி
மல்லித்தூள் - 1 தேக்கரண்டி
மஞ்சள் தூள் - 1 தேக்கரண்டி
சோம்புத் தூள் - 1/2 தேக்கரண்டி
புளி - ஒரு சிறிய எலுமிச்சையளவு
கடுகு & உளுந்து - 1 தேக்கரண்டி
சோம்பு - 1/4 தேக்கரண்டி
கறிவேப்பிலை - இரண்டு கொத்து
வெல்லம் - சிறிய கட்டி (ஐந்து கிராம்)
எண்ணை - 2 மேசைக்கரண்டி
உப்பு - தேவையான அளவு
செய்முறை:
முதலில் பாகற்காயை சற்று கணமான வில்லைகளாக நறுக்கி அரை டீ ஸ்பூன் உப்பு சேர்த்து பிசறி பத்து நிமிடம் வைக்கவும்.
பூண்டுப் பல்லை தட்டி வைக்கவும்.
தக்காளியை நான்காகவும், ப. மிளகாய், வெங்காயத்தை இரண்டிரண்டாக நறுக்கவும்
புளியை இரண்டு டம்ளர் தண்ணீரில் கரைத்து வடிகட்டி வைக்கவும்.
பாகற்காயை கழுவி மிளகாய்த்தூள், மல்லித்தூள், மஞ்சள் தூள், சோம்புத் தூள், இரண்டு ஸ்பூன் உப்பு சேர்த்து பிசறி வைக்கவும்.
அடுப்பில் வாணலியை வைத்து எண்ணை ஊற்றி கடுகு & உளுந்து, சோம்பு வெடிக்க விட்டு வெங்காயம், பூண்டு, ப. மிளகாய், கறிவேப்பிலை போட்டு வதக்கி, சிவந்ததும் தக்காளி சேர்த்து வதக்கவும்.
மூன்று நிமிடம் கழித்து காய் கலவையை போட்டு வதக்கவும்.
ஐந்து நிமிடம் நன்கு வதக்கி புளிக் கரைசலை ஊற்றவும்.
பத்து நிமிடம் நன்கு கொதித்து காயும் நன்றாக வெந்தவுடன் வெல்லம் தட்டிப் போட்டு மேலும் ஐந்து நிமிடம் கொதிக்க விட்டு இறக்கி பரிமாறவும்.