பலாக்காய் சொதி
தேவையான பொருட்கள்:
சிறிய பிஞ்சு பலாக்காய் - 1
சின்ன வெங்காயம் - 20
தக்காளி - 2
சோம்பு - 1/2 தேக்கரண்டி
சீரகம் - 1/2 தேக்கரண்டி
பூண்டு - 3 பல்
மிளகு - 10
பச்சை மிளகாய் - 5
தேங்காய் - அரை மூடி
மஞ்சள் பொடி - 1/2 தேக்கரண்டி
கறிவேப்பிலை - சிறிது
கடுகு + உளுந்து - 1 தேக்கரண்டி
ரீபைண்டு ஆயில் - 3 தேக்கரண்டி
உப்பு - தேவையான அளவு
செய்முறை:
முதலில் பலாக்காயை தோல் சீவி நடுவில் உள்ள கட்டையை நீக்கி சிறிய துண்டுகளாக வெட்டி உப்பு போட்டு வேக வைத்துக்கொள்ள வேண்டும்.
அடுப்பில் வாணலியை வைத்து மிளகு, சீரகம், சோம்பு, பூண்டு, பச்சை மிளகாய், மஞ்சள் போடி, தேங்காய் துருவல் எல்லாவற்றையும் வறுத்து அரைக்க வேண்டும்.
இப்போது இரண்டு ஸ்பூன் எண்ணையை காய வைத்து பதினைந்து வெங்காயங்களை நறுக்கி வதக்கி வேக வைத்த பலாக்காயையும் தக்காளியையும் சேர்த்து வதக்கவும். நன்றாக வதங்கியதும் அரைத்த விழுதைக் கொட்டி வேக வைத்து நன்றாக சேர்ந்து கொதித்தவுடன் இறக்கவும்.
வாணலியில் ஒரு தேக்கரண்டி எண்ணைய் ஊற்றி கடுகு + உளுந்து தாளித்து மீதமுள்ள வெங்காயத்தை போட்டு வதக்கி , கறிவேப்பிலை சேர்த்து காய்கறி கலவையில் கொட்டி நன்றாக மூடவும். பத்து நிமிடங்கள் கழித்து எடுத்து பறிமாறவும்.