பருப்பு உருண்டைக் குழம்பு

on on on on on 1 - Excellent!
5 நட்சத்திரங்கள் - 1 மதிப்பாய்வின் அடிப்படையில்

தேவையான பொருட்கள்:

கடலைப்பருப்பு - 150 கிராம்

துவரை பருப்பு - 150 கிராம்

பெரிய வெங்காயம் - 2

சின்ன வெங்காயம் - 20

பச்சை மிளகாய் - 4

கறிவேப்பிலை - இரண்டு கொத்து

தக்காளி - 2

புளி - பெரிய நெல்லிக்காயளவு

மல்லிப் பொடி - 1 மேசைக்கரண்டி

மிளகாய் பொடி - 1 மேசைக்கரண்டி

மஞ்சள் பொடி - 1/2 தேக்கரண்டி

சோம்பு - 1 மேசைக்கரண்டி

தேங்காய் - அரை மூடி

பூண்டு - 3 பல்

கடுகு + உளுந்து - தாளிக்க

ரீபைண்டு ஆயில் - உருண்டைகளை பொரிக்க

உப்பு - தேவையான அளவு

செய்முறை:

முதலில் இரண்டு வகைப் பருப்புகளையும் அரை மணி நேரம் ஊற வைக்க வேன்டும்

சின்ன வெங்காயம், பெரிய வெங்காயம், தக்காளி, பச்சை மிளகாய் எல்லவற்றையும் நறுக்கி வைத்துக்கொள்ளவும்.

சோம்பை பொடித்தும், பூண்டை நன்றாக தட்டியும்,தேங்காயை துருவியும் புளியை கறைத்தும் வைத்து கொள்ளவும்.

இப்பொழுது ஊறிய பருப்புகளை வடைக்கு அரைப்பதைப் போல அரைத்துக் கொள்ளவும். மவை எடுக்கப் போகும் நேரத்தில் தேங்காய்த் துருவல், பச்சை மிளகாய், பெரிய வெங்காயம், தட்டிய பூண்டு, ஒரு டீ ஸ்பூன் உப்பு, சோம்பு பொடி எல்லாவற்றையும் சேர்த்து மூன்று சுற்று சுற்றி வழித்தெடுக்கவும்.

மாவினை சிறிய உருண்டைகளக உருட்டி, இரண்டு உருண்டைகளை தனியாக எடுத்து வைத்து விட்டு மற்றவற்றை பொரித்து எடுக்கவும்.

அடுப்பில் வணலியை வைத்து இரண்டு தேக்கரண்டி எண்ணை ஊற்றி சின்ன வெங்காயத்தை போட்டு, வதங்கியதும் தக்காளி போடவும்.

இரண்டும் நன்றாக வதங்கியதும் புளியை ஊற்றி மல்லிப் பொடி, மிளகாய் பொடி, மஞ்சள் பொடி, ஒன்றரை தேக்கரண்டி உப்பு சேர்த்து கொதிக்க விடவும்.

முக்கால் வாசி கொதித்ததும் எடுத்து வைத்த இரண்டு உருண்டைகளைப் கரைத்துப் போடவும்.

பச்சை வாசணை போக கொதித்ததும் பொரித்து வைத்த உருண்டைகளைப் போடவும்

பத்து நிமிடங்கள் கழித்து இறக்கி விடவும்.

சிறிய வாணலியை வைத்து கடுகு + உளுந்து போட்டு, வெடித்ததும் தட்டிய சின்ன வெங்காயம் இரண்டையும் கறிவேப்பிலையையும் போட்டு வாசணை வந்ததும் குழம்பில் கொட்டி மூடவும்.

குறிப்புகள்: