நியுட்ரிஷியஸ் ரசம்

off off off off off 0

தேவையான பொருட்கள்:

துவரம்பருப்பு - 1 தேக்கரண்டி

பாசிப்பயறு - 1 தேக்கரண்டி

கொண்டைக்கடலை - 1 தேக்கரண்டி

கொள்ளுப்பருப்பு - 1 தேக்கரண்டி

தட்டைப்பயறு - 1 தேக்கரண்டி

புளி - சிறிய எலுமிச்சம்பழ அளவு

மிளகு - 1 தேக்கரண்டி

சீரகம் - 1/2 தேக்கரண்டி

மல்லி - 1 தேக்கரண்டி

வரமிளகாய் - 2

பூண்டு - 4 பல்

மஞ்சள் பொடி - 1/2 தேக்கரண்டி

கடுகு - 1 தேக்கரண்டி

உளுத்தம் பருப்பு - 1/2 தேக்கரண்டி

பெருங்காயம் - 1/2 தேக்கரண்டி

கறிவேப்பிலை, கொத்தமல்லி - சிறிதளவு

எண்ணை - பொரிக்க தேவையான அளவு

உப்பு - தேவையான அளவு

செய்முறை:

துவரம்பருப்பை தவிர மற்ற பருப்புகளை 5 மணி நேரம் ஊற விடவும்.

குக்கரில் துவரம்பருப்பு, ஊற வைத்த பருப்பு வகைகளை சேர்த்து 4 கப் தண்ணீர், மஞ்சள்பொடி பெருங்காயம் சேர்த்து வேக விடவும்.

5 விசில் வந்ததும் அடுப்பை நிறுத்தவும். குக்கர் ஆறியதும் குக்கரை திறந்து பருப்பை நன்றாக கடையவும். புளியை 3 கப் தண்ணீர் ஊற்றி கரைத்து தக்காளியையும் கரைத்து விடவும்.

மிளகு, சீரகம், மல்லி, வரமிளகாய், பூண்டு இவற்றை அரைத்துக் கொள்ளவும்.

அடுப்பில் வாணலியை வைத்து எண்ணெய் ஊற்றி கடுகு, உளுத்தம் பருப்பு தாளிக்கவும்.

புளி, தக்காளி கரைசலை ஊற்றி உப்பு சேர்க்கவும். 5 நிமிடம் கொதிக்கவிடவும்.

அரைத்து வைத்துள்ள ரசப்பொடியை சேர்க்கவும்.

4 நிமிடம் கொதித்ததும் கடைந்து வைத்துள்ள பருப்புத்தண்ணீரை சேர்க்கவும்.

2 நிமிடம் கொதித்ததும் கறிவேப்பிலை மல்லி சேர்த்து இறக்கி பரிமாறவும்.

குறிப்புகள்: