தந்தூரி சிக்கன்
தேவையான பொருட்கள்:
கோழி (சுத்தம் செய்து கொள்ளவும்) - 1/2 கிலோ
கிராம்பு - 6
இஞ்சி - 1 அங்குலம்.
தனியா - 1 தேக்கரண்டி
கருஞ்சீரகம் - 1/2 தேக்கரண்டி
வினிகர் - 2 மேசைக்கரண்டி
எலுமிச்சை சாறு - 2 மேசைக்கரண்டி
தயிர் - 1 கப்
வெள்ளை மிளகுத்தூள் - 1/2 தேக்கரண்டி
சிவப்பு கலர் பவுடர் - 1 சிட்டிகை
முந்திரி பருப்பு (வறுத்தது) - 10 என்னம்
கொத்தமல்லி தழை (நறுக்கியது) - 1/4 கப்
செய்முறை:
கிராம்பு, இஞ்சி, தனியா, கருஞ்சீரகம் இவற்றை அரைத்துக் கொள்ளவும்.
உப்பு, வினிகர், எலுமிச்சை சாறு, அரைத்த மசாலாவையும் சேர்த்து இவற்றைக் கோழி துண்டுகள் மீது நன்கு தடவவும்.
இதனுடன் தயிர், வெள்ளை மிளகுத்தூள், சிவப்பு கலரையும் கலந்து கோழி துண்டுகளை 3 மணி நேரம் ஊற விடவும்.
பின்னர் தந்தூரி அடுப்பு அல்லது ஓவனில் 15 நிமிடம் வைத்து சிவந்தபின் எடுக்கவும்.
வறுத்த முந்திரி, நறுக்கிய மல்லிதழைகளை தூவி அலங்கரித்து பறிமாறவும்.