சேப்பங்கிழங்கு வறுவல்
0
தேவையான பொருட்கள்:
சேப்பங்கிழங்கு - 4
மிளகாய் தூள் - 1 தேக்கரண்டி
எண்ணைய் - 3 தேக்கரண்டி
உப்பு - தேவையான அளவு
செய்முறை:
சேப்பங்கிழங்கை குக்கரில் 10 நிமிடம் வேகவைக்கவும்.
பின் தோலுரித்து நீளவாக்கில் 4 துண்டங்களாக வெட்டவும்.
வாணலியில் எண்ணைய் ஊற்றி காய்ந்த்தும் சேப்பங்கிழங்கை சிவக்க வறுக்கவும்.
வறுத்து எடுத்த சேப்பங்கிழங்குடன் மிளகாய் தூள், உப்பு சேர்த்து பிரட்டி எடுக்கவும்.