சேனைக்கிழங்கு மசியல்





தேவையான பொருட்கள்:
சேனைக்கிழங்கு - 1 கப்
பச்சைமிளகாய் - 4
லெமன் ஜீஸ் - 1 தேக்கரண்டி
உப்பு - தேவையான அளவு
தாளிக்க:
எண்ணெய் - 1 தேக்கரண்டி
கடுகு - 1/4 தேக்கரண்டி
மிளகாய் வற்றல் - 1
பெருங்காயம் - 1/4 தேக்கரண்டி
உளுந்து - 1/4 தேக்கரண்டி
மஞ்சள் தூள் - 1/4 தேக்கரண்டி
இஞ்சி - 1 துண்டு
செய்முறை:
சேனைக்கிழங்கை தோல் சீவி நல்ல சதுர துண்டுகளாக்கவும்.
உப்பு, மஞ்சள் தூள் சேர்த்து நன்றாக மசிய வேக வைக்கவும்.
வெந்தபின் தாளிக்க வேண்டியவையை தாளித்து அதில் சின்ன துண்டுகளாக்கிய பச்சைமிளகாய், இஞ்சி சேர்த்துநன்றாக வதக்கி வெந்த சேனைக்கிழங்கில் கொட்டவும்.
லெமன் ஜூஸ் விட்டு நன்றாக கலக்கவும்.
குறிப்புகள்:
இதை சூடு சாதத்துடன் சாப்பிட நன்றாக இருக்கும்.