செள செள கூட்டு
தேவையான பொருட்கள்:
செள செள - 1/4 கிலோ
கடலைப்பருப்பு - 50 கிராம்
மஞ்சள் பொடி - 1/2 தேக்கரண்டி
சின்ன வெங்காயம் - 50 கிராம்
பச்சை மிளகாய் - 3
கடுகு, உளுத்தம் பருப்பு - 1 மேசைக்கரண்டி
வரமிளகாய் - 1
கறிவேப்பிலை - இரண்டு கொத்து
எண்ணெய் - 2 மேசைக்கரண்டி
உப்பு - தேவையான அளவு
அரைக்க:
மல்லி விதை - 1/2 தேக்கரண்டி
சோம்பு - 1/2 தேக்கரண்டி
சீரகம் - 1/2 தேக்கரண்டி
பூண்டு - 1 பல்
செய்முறை:
கடலைப்பருப்பை மஞ்சள் பொடி சேர்த்து கால் லிட்டர் தண்ணீர் விட்டு வேக வைக்கவும்.
அரைக்க வைத்துள்ளவற்றை விழுதாக அரைக்கவும். செள செள, வெங்காயம், பச்சைமிளகாய் பொடியாக நறுக்கவும்.
பருப்பு அரை வேக்காடு வெந்ததும் செள செள, அரைத்த விழுது, உப்பு சேர்த்து நன்றாக வேக விடவும்.
எல்லாம் சேர்ந்து நன்றாக வெந்ததும் இறக்கவும். அடுப்பில் கடாயை வைத்து ஒரு டேபிள் ஸ்பூன் எண்ணெய் விட்டு வெங்காயம், பச்சைமிளகாய் போட்டு வாசனை வர வதக்கவும்.
பிறகு கலவையை கொட்டி ஐந்து நிமிடம் கொதிக்க விட்டு இறக்கவும்.
அடுப்பில் சிறிய வாணலியை வைத்து மீதமுள்ள எண்ணெய் ஊற்றி வர மிளகாய் கிள்ளிப் போட்டு கடுகு, உளுத்தம் பருப்பு வெடிக்க விட்டு இரண்டு சின்ன வெங்காயம் தட்டிப் போட்டு சிவந்ததும் கறிவேப்பிலை உருவிப் போட்டு கூட்டில் ஊற்றி இறுக மூடி வைக்கவும். பத்து நிமிடம் கழித்து திறந்து கிளறி பரிமாறவும்.