செட்டி நாடு கறி

off off off off off 0

தேவையான பொருட்கள்:

மட்டன் - 1/4 கிலோ

தக்காளி - 2

பச்சை மிளகாய் - 4

இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1 மேசைக்கரண்டி

கரம் மசாலா தூள், மிளகு தூள், மிளகாய் தூள், சீரக தூள், மஞ்சள் தூள், சோம்பு தூள் - அனைத்தும் தலா 1/4 தேக்கரண்டி

தனியாதூள் - 1 தேக்கரண்டி

உப்பு - தேவையான அளவு

தாளிக்க:

எண்ணெய் - 1 தேக்கரண்டி

நெய் - 1/2 தேக்கரண்டி

பொடியாக நறுக்கிய கறிவேப்பிலை - 1 தேக்கரண்டி

பொடியாக நறுக்கிய கொத்தமல்லி தழை - 2 தேக்கரண்டி

செய்முறை:

மட்டனை சுத்தம் செய்து அதில் உப்பு, இஞ்சி பூண்டு பேஸ்ட் மேலே குறிப்பிட்டுள்ள அனைத்து தூள் வகைகளையும் போட்டு கலக்கவும்.

அதில் தக்காளி பச்சை மிளகாயை மிக்ஸியில் அரைத்து ஊற்றவும்.

அனைத்தையும் நன்கு வேக வைக்கவும். கறி வெந்ததும் சிறிது நேரம் கொதிக்கவிட்டு இறக்கவும். கடைசியில் தாளிக்க வேண்டியவைகளை போட்டு தாளித்து கலக்கி பரிமாறவும்.

குறிப்புகள்: