செட்டிநாட்டு பெப்பர் சிக்கன்
தேவையான பொருட்கள்:
சிக்கன் - 1/2 கிலோ
க்ரஷ்டு பெப்பர் - 1 1/2 மேசைக்கரண்டி
வெங்காயம் - 2
தக்காளி - 2
இஞ்சி, பூண்டு விழுது - 1 1/2 மேசைக்கரண்டி
மஞ்சள் தூள் - 1/2 தேக்கரண்டி
தனியாத் தூள் - 2 தேக்கரண்டி
சீரகத் தூள் - 1 தேக்கரண்டி
பட்டை, கிராம்பு, ஏலக்காய் - தலா ஒன்று
கடுகு - 1 தேக்கரண்டி
சீரகம் - 1/2 தேக்கரண்டி
கறிவேப்பிலை - ஒரு கொத்து
எண்ணெய் - தேவையான அளவு
உப்பு - தேவையான அளவு
செய்முறை:
சிக்கனைச் சுத்தம் செய்து நன்கு கழுவி வைக்கவும். ஒரு பாத்திரத்தில் எண்ணெய் விட்டு பட்டை, கிராம்பு, ஏலக்காய், கடுகு, சீரகம் போட்டுத் தாளிக்கவும்.
அத்துடன் நறுக்கிய வெங்காயத்தைச் சேர்த்து பொன்னிறமாக, மொறுமொறுப்பாக ஆகும் வரை வதக்கவும். வதங்கியதும் இஞ்சி, பூண்டு விழுது சேர்த்து வதக்கவும்.
வதங்கியதும் கறிவேப்பிலை, மஞ்சள் தூள், ஒரு மேசைக்கரண்டி அளவு க்ரஷ்டு பெப்பர் சேர்த்து வதக்கவும்.
பிறகு நறுக்கிய தக்காளியைச் சேர்த்து ஈரப்பதம் போகும் வரை சுருள வதக்கவும்.
தக்காளி வதங்கியதும் தனியாத் தூள், சீரகத் தூள் மற்றும் உப்பு சேர்த்து வதக்கவும்.
அத்துடன் சுத்தம் செய்து வைத்துள்ள சிக்கனைச் சேர்த்துக் கிளறவும்.
தண்ணீர் ஊற்றாமல் 20 நிமிடங்கள் சிறு தீயில் வைத்து வேகவிடவும். கடைசியாக மீதமுள்ள க்ரஷ்டு பெப்பரைச் சேர்த்துக் கிளறி இறக்கி பரிமாறவும்.