செட்டிநாட்டு நாட்டுக்கோழி குழம்பு
தேவையான பொருட்கள்:
நாட்டுக் கோழி கறி - 1 கிலோ
சி.வெங்காயம் - 100 கிராம்
தக்காளி - 2
பட்டை, கிராம்பு, இலை, அன்னாசிப் பூ - தாளிக்க
கறிவேப்பிலை - இரண்டு கொத்து
எண்ணை - 3 மேசைக்கரண்டி
உப்பு - தேவையான அளவு
அரைக்க:
சோம்பு - 1 மேசைக்கரண்டி
சீரகம் - 1 மேசைக்கரண்டி
மஞ்சள் பொடி - 1 1/2 மேசைக்கரண்டி
பூண்டு - 6 பெரிய பல்
இஞ்சி - 50 கிராம்
வர மிளகாய் - பதினைந்து
மல்லி விதை - 2 1/2 மேசைக்கரண்டி
தேங்காய் துருவல் - 3 மேசைக்கரண்டி
கசகசா - 1 தேக்கரண்டி
செய்முறை:
முதலில் கோழிக் கறியை சிறிய துண்டங்களாக நறுக்கி அரை டேபிள் ஸ்பூன் மஞ்சள் பொடி பிசறி வைக்கவும்.
சீரகம், சோம்பு, ஒரு டேபிள் ஸ்பூன் மஞ்சள் பொடி, இஞ்சி, பூண்டு சேர்த்து தனியாக விழுதாக அரைக்கவும்.
மிளகாய், மல்லியை தனியாக விழுதாக அரைக்கவும்,
தேங்காய் துருவல், கசகசா தனியாக விழுதாக அரைக்கவும்.
வெங்காயத்தை இரண்டாகவும், தக்காளியை நான்காகவும் நறுக்கவும்.
இப்போது கோழிக் கறியை நன்றாக நான்கு முறை தண்ணீர் ஊற்றி கழுவவும்.
அடுப்பில் வாணலியை வைத்து எண்ணை ஊற்றி தாளிக்க வைத்துள்ளவற்றைப் போட்டு வதக்கவும்.
வாசனை வந்ததும் கறிவேப்பிலை, வெங்காயம் போட்டு சிவக்க வறுக்கவும்.
பிறகு கோழிக்கறியை போட்டு ஐந்து நிமிடம் வதக்கி பின் தக்காளி சேர்க்கவும்.
ஐந்து நிமிடம் வதக்கிய பின் நான்கு டம்ளர் தண்ணீர், மஞ்சள் & சோம்பு விழுது, உப்பு சேர்த்து பத்து நிமிடம் கொதிக்கவிடவும்.
பின் மிளகாய், மல்லி கலவை சேர்த்து பத்து நிமிடம் கொதிக்க விடவும்.
பின் தேங்காய் விழுது சேர்த்து பத்து நிமிடம் கொதிக்க விட்டு இறக்கி பரிமாறவும்.