செட்டிநாட்டு கோழிக்குழம்பு

off off off off off 0

தேவையான பொருட்கள்:

கோழி - 1 கிலோ

வெங்காயம் - 1

தக்காளி - 4

மஞ்சள்பொடி - 1/2 தேக்கரண்டி

மிளகாய்ப்பொடி - 3 தேக்கரண்டி

மல்லிப்பொடி - 4 தேக்கரண்டி

அரைக்க:

மிளகு - 1 தேக்கரண்டி

சீரகம் - 1 தேக்கரண்டி

சோம்பு - 1 தேக்கரண்டி

பூண்டு - 6 பல்

இஞ்சி - ஒரு துண்டு

வெங்காயம் - 1

உப்பு - தேவையான அளவு

தாளிக்க:

நல்லெண்ணெய் - 4 தேக்கரண்டி

பட்டை - 2

கிராம்பு - 1

அன்னாசிப்பூ - 2

சோம்பு - 1/2 தேக்கரண்டி

வெந்தயம் - 1/2 தேக்கரண்டி

செய்முறை:

ஒரு கடாயில் மிளகு, சீரகம், சோம்பு மூன்றையும் வறுத்து பூண்டு, இஞ்சி, வெங்காயாம் சேர்த்து அரைத்து மஞ்சள் பொடி சேர்த்து கோழியுடன் பிசறவும்.

கடாயில் நல்லெண்ணெய் விட்டு தாளிக்க வேண்டியவற்றை தாளித்து பொடியாக நறுக்கிய வெங்காயம், தக்காளி சேர்த்து வதக்கி, பிசறிய கோழியை சேர்த்து 10 நிமிடம் கிளறவும்.

வதங்கியதும் மிளகாய்ப்பொடி, மல்லிப்பொடி சேர்த்து கிளறி தேவையான தண்ணீர் விட்டு உப்பு சேர்த்து கொதிக்கவிடவும்.

குழம்பு கொதித்து வற்றி எண்ணெய் மிதந்தவுடன் இறக்கி பரிமாறவும்.

குறிப்புகள்: