செட்டிநாட்டு உக்காரு

off off off off off 0

தேவையான பொருட்கள்:

பாசிபருப்பு - 1/2 கப்

ரவை - 1/4 கப்

தேங்காய் துருவல் - 1/2 கப்

சீனி - 1 1/2 கப்

நெய் - 1/2 கப்

ஏலக்காய் - 2

முந்திரிபருப்பு

செய்முறை:

பாசிப்பருப்பை மலர வேக வைத்து எடுத்துக் கொள்ளவும்.

ரவையை வறுத்து வைக்கவும்.

நெய்யை பாதி அளவை ஊற்றி அதில் முந்திரி பருப்பை வறுத்து அதனுடன் தேங்காய் துருவலை சேர்த்து வதக்கவும்.

பிறகு வறுத்த ரவையை இதனுடன் சேர்க்கவும்.

வேக வைத்துள்ள பாசிப்பருப்பை இதனுடன் சேர்த்து கிண்டவும்.

கொஞ்சம் கெட்டியாக வந்தவுடன் சீனி சேர்த்து, பிறகு மீதம் உள்ள நெய், ஏலக்காய் சேர்த்து அடி பிடிக்காமல் கிண்டவும்.

மிதமான தீயில் வைத்து நெய் நன்றாக வெளியில் வரும் வரை கிண்டவும்.

குறிப்புகள்:

நெய் அரை கப் சேர்க்க விரும்பாதவர்கள் நெய் பாதி, எண்ணெய் பாதி சூடு செய்து சேர்த்து கொள்ளலாம்.