செட்டிநாடு ஸ்பைஸி சிக்கன்
தேவையான பொருட்கள்:
சிக்கன் - 1 கிலோ
பெரிய வெங்காயம் - 2
இஞ்சி பூண்டு பேஸ்ட் - 2 மேசைக்கரண்டி
பெரிய தக்காளி - 2
மிளகாய் தூள் - 2 தேக்கரண்டி
மஞ்சள் தூள் - 1 தேக்கரண்டி
தனியா தூள் - 2 மேசைக்கரண்டி
தாளிக்க:
எண்ணெய் - 100 மில்லி
இரண்டு அங்குலம் பட்டை - 2
ஏலக்காய் - 4
மிளகு - 1 தேக்கரண்டி
கறிவேப்பிலை - சிறிது
கடைசியில் தூவ:
மிளகு (பொடித்து கொள்ளவும்) - 1 தேக்கரண்டி
எலுமிச்சை - 2
கறிவேப்பிலை - சிறிது
கொத்தமல்லி - சிறிது
பட்டர் - 1 மேசைக்கரண்டி
செய்முறை:
சிக்கனை கழுவி சின்ன சின்ன துண்டுகளாக போட்டு தண்ணீரை வடித்து வைக்க வேண்டும்.
ஒரு பெரிய வாயகன்ற சட்டியை காய வைத்து பட்டை, ஏலக்காய், மிளகு, கறிவேப்பிலை போட்டு வெடிக்க விட்டு வெங்காயத்தை போட்டு வதக்க வேண்டும்.
பிறகு இஞ்சி பூண்டு பேஸ்ட் போட்டு நன்கு வதக்கி நிறம் மாறியதும் மிளகாய் தூள், மஞ்சள் தூள், தனியா தூள் போட்டு வதக்கி சிக்கனை போட்டு அதிக தீயில் கிளற வேண்டும்.
பிறகு தக்காளியை பொடியாக நறுக்கி போட்டு உப்பும் சேர்த்து நன்கு கிளறி தீயை சிம்மில் வைத்து ஐந்து நிமிடம் தக்காளியை வதங்க விட வேண்டும். பிறகு ஒரு டம்ளர் தண்ணீர் சேர்த்து மீண்டும் வேக விட வேண்டும்.
கடைசியில் பட்டர், பொடித்த மிளகு, கறிவேப்பிலை, எலுமிச்சைச்சாறு ஊற்றி கொத்தமல்லி தழை தூவி இறக்கி பரிமாறவும்.