செட்டிநாடு பக்கோடா
0
தேவையான பொருட்கள்:
கடலை மாவு - 1/2 கிலோ
பச்சரிசி மாவு - 100 கிராம்
பச்சைமிளகாய் - 50 கிராம்
கறிவேப்பிலை - 3 இனுக்கு
பொடியாக நறுக்கிய கொத்தமல்லி தழை - 1/2 கட்டு
நீளமாக நறுக்கிய சிறிய வெங்காயம் - 200 கிராம்
சீரகம் - 1 தேக்கரண்டி
சோம்பு - 1 தேக்கரண்டி
இட்லி சோடா - 4 சிட்டிகை
எண்ணை - பொரிக்க தேவையான அளவு
உப்பு - தேவையான அளவு
செய்முறை:
ஒரு பெரிய கடாயில் கடலை மாவு,பச்சரிசி மாவையும் கலந்து கொள்ளவும்.
இதனுடன் மேலே சொன்ன பொருட்கள் எல்லாவற்றையும் கலந்து சிறிதளவு தண்ணீர் சேர்த்து கெட்டியாக பிசையவும்.
வாணலியில் 1/2 லிட்டர் எண்ணையை ஊற்றி காய்ந்ததும் மாவை எடுத்து உதிர்த்து விடவும்.
சிவக்க வெந்ததும் எடுத்து பறிமாறலாம்.