செட்டிநாடு சூப்
0
தேவையான பொருட்கள்:
துவரம் பருப்பு நீர் (பருப்பு வேகவைத்த நீர் மட்டும் போதும் பருப்பு வேண்டாம்) - 2 கப்
லவங்கம் - 1
பொடியாக நறுக்கிய தக்காளி - 1
பொடியாக நறுக்கிய பச்சைமிளகாய் - 1
பொடியாக நறுக்கிய வெங்காயம் - 1
நசுக்கிய பூண்டு - 2 பல்
பால் - 1 கரண்டி
உப்பு - தேவையான அளவு
செய்முறை:
வாணலியில் 2 ஸ்பூன் எண்ணைய் விட்டு லவங்கம் போட்டு பச்சைமிளகாய், வெங்காயம், தக்காளி சேர்த்து நன்றாக வதக்கவும்.
அதனுடன் துவரம் பருப்பு நீர் ஊற்றி உப்பு சேர்த்து கொதிக்கவிடவும்.
இறக்கும் சமயத்தில் பூண்டு போட்டபின் காய்ச்சி நன்கு ஆறிய பாலை ஊற்றி இறக்கி பரிமாறவும்.