செட்டிநாடு சிக்கன்

off off off off off 0

தேவையான பொருட்கள்:

சிக்கன் - 1/4 கிலோ

பெரிய வெங்காயம் - 2

தக்காளி - 2

பச்சை மிளகாய் - 1

சின்ன வெங்காயம் - 1 கைப்பிடி

சீரகம் - 1 தேக்கரண்டி

சோம்பு - 1 தேக்கரண்டி

மிளகு - 1 தேக்கரண்டி

மஞ்சள் தூள் - 1/2 தேக்கரண்டி

கறிவேப்பிலை - சிறிது

கொத்தமல்லி தழை - 1 மேஜைக்கரண்டி

எண்ணெய் - 2 தேக்கரண்டி

உப்பு - தேவையான அளவு

செய்முறை:

சிக்கனை சுத்தம் செய்து கொழுப்பு,தோல் இல்லாமல் ஆவியில் 10 நிமிடம் வேகவைத்து எடுக்கவும்.

வாணலியில் 1 தேக்கரண்டி எண்ணெய் விட்டு சீரகம், மிளகு, சோம்பு, சின்ன வெங்காயம் சேர்த்து வதக்கி கரகரப்பாக அரைக்கவும்.

வெங்காயம், தக்காளி பொடியாக நறுக்கவும்.

வாணலியில் மீதி எண்ணெயை ஊற்றி வெங்காயம், தக்காளி, பச்சை மிளகாய் வதக்கவும்.

வதங்கிய பின் அரைத்த விழுது சேர்த்து வதக்கி, வேக வைத்த சிக்கன்,மஞ்சள் தூள், உப்பு சேர்த்து 10 நிமிடம் வேக விட்டு இறக்கி பரிமாறவும்.

குறிப்புகள்: