செட்டிநாடு காலிஃப்ளவர் சூப்
1 - Great!
4 நட்சத்திரங்கள் - 1 மதிப்பாய்வின் அடிப்படையில்
தேவையான பொருட்கள்:
காலிஃப்ளவர் - பாதியளவு சிறிய பூவில்
வெங்காயம் - 1
தக்காளி - 2
பச்சைமிளகாய் - 2
துவரம்பருப்பு வேக வைத்த தண்ணீர் - 3 டம்ளர்
பட்டை - ஒரு துண்டு
பூண்டு - 3 பல்
பால் - 1/2 கப்
நெய் - 1 தேக்கரண்டி
மல்லித்தழை - சிறிதளவு
எண்ணெய் - ஒரு தேக்கரண்டி
உப்பு - தேவையான அளவு
செய்முறை:
காய்கறிகளை சுத்தம் செய்து சிறு துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும்.
வாணலியில் எண்ணெயைக் காயவைத்து, பட்டை தாளித்து, காய்கறிகளை சேர்த்து வதக்கி, பருப்புத் தண்ணீரையும் உப்பையும் சேர்த்து ஐந்து நிமிடங்கள் வேக வைத்து இறக்கவும்.
அதில் பூண்டை தட்டிப் போட்டு பால் ஊற்றி சிறிது நேரம் மூடி வைக்கவும். பிறகு மல்லித்தழை தூவிப் பரிமாறவும்.