சிக்கன் மிளகு சாப்ஸ்
தேவையான பொருட்கள்:
சிக்கன் - 1/2 கிலோ
பெரிய வெங்காயம் - 2
தக்காளி - 2
பூண்டு - 5 பல்
இஞ்சி - சிறிய துண்டு
மிளகுத்தூள் - ஒரு தேக்கரண்டி
மல்லித்தூள் - 2 தேக்கரண்டி
மஞ்சள்தூள் - 1/2 தேக்கரண்டி
பட்டை - 1
கிராம்பு - 2
கறிவேப்பிலை - சிறிது
எண்ணெய் - சிறிது தாளிப்பதற்கு
உப்பு - தேவையான அளவு
செய்முறை:
பெரிய வெங்காயம், தக்காளி இரண்டையும் பொடி பொடியாக நறுக்கிக் கொள்ளவும். பூண்டு, இஞ்சியை விழுதாய் அரைத்துக் கொள்ளவும்.
கடாயில் எண்ணெய் விட்டு காய்ந்த பின்பு பட்டை, கிராம்பு தாளித்து நறுக்கிய வெங்காயத்தைப் போட்டு நன்றாக வதக்கவும்.
வெங்காயம் வதங்கியபின் இஞ்சி, பூண்டு விழுதினைப் போட்டு வதக்கி, பிறகு தக்காளியைப் போட்டு நன்றாக எண்ணெய் மேலே மிதக்கும் வரை வதக்கவும்.
கழுவிய சிக்கனைப் போட்டு, மஞ்சள்தூள், மிளகுத்தூள், மல்லித்தூள், உப்பு சேர்த்து வதக்கவும். சிறிது கறிவேப்பிலையையும் உடன் சேர்த்துக் கொள்ளவும்.
கறி நன்கு வதங்கியபின் அரை டம்ளர் தண்ணீர் விட்டு மூடிவிடவும்.
வெங்காயம் நன்றாக கொதித்து குழம்பான பிறகு, மூடியைத் திறந்து நன்றாக கிளறி பாத்திரத்தில் ஒட்டாத பதத்திற்கு வந்த பிறகு தேவையெனில் ஒரு தேக்கரண்டி தயிர் அல்லது எலுமிச்சை சாறு விட்டு கிளறி இறக்கவும்.
இது குழம்பு பதத்திற்கு இருக்கும். காய்ந்த நிலையில் வேண்டுமெனில் இன்னும் சற்று நேரம் அடுப்பில் வைத்திருந்து கிளறி குழம்பு நன்கு வற்றியவுடன் இறக்கி பரிமாறவும்.