சிக்கன் சாப்ஸ் குழம்பு
0
தேவையான பொருட்கள்:
கோழி - 500 கிராம்
எண்ணெய் - 50 கிராம்
உப்பு - தேவையான அளவு
அரைக்க:
வெங்காயம் - 20
தக்காளி - 2
மிளகாய் - 15
மிளகு - 2 தேக்கரண்டி
சீரகம் - 1 தேக்கரண்டி
சோம்பு - 1 தேக்கரண்டி
கசகசா - 1 தேக்கரண்டி
தேங்காய் - 3 சில்
இஞ்சி - சிறிது
பூண்டு - 8 பல்
மஞ்சள் தூள் - 1 தேக்கரண்டி
பட்டை - 1
கிராம்பு - 1
ஏலக்காய் - 1
செய்முறை:
அரைக்க கொடுத்துள்ளவைகளை அரைத்து கோழியில் தடவி அரை மணி நேரம் ஊற வைக்க வேண்டும்.
ஒரு கடாயில் எண்ணெய் விட்டு கோழி கலவையை கொட்டி நன்கு கிளற வேண்டும். கோழியை அடிப்பிடிக்காமல் கிளறினால் எண்ணெய் பிரிந்து வரும்.
அதில் 2 டம்ளர் தண்ணீர் விட்டு உப்பு சேர்த்து கடாயை மூடி கோழியை வேக விட வேண்டும். கோழி வெந்து குழம்பு கெட்டியானவுடன் இறக்கி பரிமாறவும்.