சாம்பார்

off off off off off 0

தேவையான பொருட்கள்:

பருப்பு - 100 கிராம்

காய்கறி - 1/4 கிலோ

மஞ்சள் தூள் - 1/2 தேக்கரண்டி

பூண்டு - 4 பல்

சாம்பார் பொடி - 2 தேக்கரண்டி

புளி - எலுமிச்சைஅளவு

வெங்காயம் - 10

தக்காளி - 2

பச்சைமிளகாய் - 2

உப்பு - தேவையான அளவு

தாளிக்க:

கடுகு, ஊளுத்தம் பருப்பு - 1 தேக்கரண்டி

சீரகம் - 1/2 தேக்கரண்டி

வெந்தயம் - 1/2 தேக்கரண்டி

பெருங்காயம் - 1 தேக்கரண்டி

எண்ணெய் - 2 தேக்கரண்டி

மிளகாய் - 2

செய்முறை:

பருப்பில் மஞ்சள் தூள், பூண்டு சேர்த்து குக்கரில் 4 விசில் வைக்கவும். பருப்பு வெந்தவுடன் காய்கறி, பாதி வெங்காயம், தக்காளி பச்சைமிளகாய், சாம்பார் பொடி, உப்புச்சேர்த்து நன்கு வேக விடவேண்டும்.

காய்கள் நன்கு வெந்ததவுடன் புளியைத்தண்ணீரில் கரைத்து சாம்பாரில் ஊற்றி கொதிக்க விடவேண்டும்.

ஒரு கடாயில் எண்ணெய் விட்டு கடுகு, உளுத்தம் பருப்பு, சீரகம், வெந்தயம் பெருங்காயம் போட்டு தாளித்து மிளகாய் கிள்ளிப்போட்டு 2 வெங்காயம் நறுக்கிச்சேர்த்து, கறிவேப்பிலை போட்டு வதக்கி சாம்பாரில் கொட்டவும்.

குறிப்புகள்: