சம்பாரப் புளி
0
தேவையான பொருட்கள்:
கொத்தமல்லி - ஒரு பெரிய கட்டு
புளி - ஒரு சிறிய எலுமிச்சம் அளவு
மிளகாய்வற்றல் - 6
உளுத்தம்பருப்பு - 3 தேக்கரண்டி
பெருங்காயம் - ஒரு துண்டு
உப்பு - தேவையான அளவு
செய்முறை:
கொத்தமல்லி இலையை ஆய்ந்து விட்டு சுத்தமாக தண்ணீரில் கழுவிக் கொண்டு நீரை சுத்தமாக வடித்துக் கொள்ளவும்.
வாணலியில் எண்ணெய் விட்டு மிளகாய், உளுத்தம் பருப்பு, பெருங்காயம், போட்டு வறுத்துக் கொள்ளவும்.
பிறகு வறுத்து வைத்தவை, கொத்தமல்லி, புளி, உப்பு சேர்த்து தண்ணீர் விடாமல் கல்லுரலில் போட்டு இடித்து எடுக்கவும்.
குறிப்புகள்:
இதை துவையல் போல் உபயோகப்படுத்தவும்.