கோஸ் மல்லி

off off off off off 0

தேவையான பொருட்கள்:

விதை கத்திரிக்காய் - 2 பெரியது

உருளைக்கிழங்கு - 1 சின்னது

பெரிய வெங்காயம் - 1 நீளவாக்கில் அரிந்தது

தக்காளி - 1 நீளவாக்கில் அரிந்தது

புளி - சிறிதளவு

மஞ்சள் தூள் - 1/4 தேக்கரண்டி

பச்சை மிளகாய் - 1

தாளிக்க:

எண்ணெய் - சிறிதளவு

கடுகு - 1/2 தேக்கரண்டி

உளுத்தம் பருப்பு - 1/4 தேக்கரண்டி

சீரகம் - 1/4 தேக்கரண்டி

வெந்தயம் - 1/4 தேக்கரண்டி

பெருங்காயம் - 1 பின்சு

காய்ந்த மிளகாய் - 1

கறிவேப்பிலை - சிறிதளவு

மல்லி இழை - சிறிதளவு

செய்முறை:

கத்திரிகாய்,உருளை நல்லா வேக வைத்து தோல் நீக்கி மசித்து வைத்து கொள்ளவும்.

ஒரு பாத்திரத்தில் சிறிது எண்ணெய் விட்டு தாளிக்க கொடுத்துள்ள பொருட்களை தாளித்து வெங்காயம்,ப.மிளகாய்,தக்காளி சிறிது உப்பு போட்டு நல்லா வதக்கவும்.

சிறிதளவு தண்ணீர் ஊற்றி மஞ்சள் தூள் போட்டு நல்லா கொதிக்க விடவும்.

பின்னர் மசித்த கத்திரி,உருளை கலவை போட்டு சிறிது புளி தண்ணீர் ஊற்றி தேவையான உப்பு போட்டு நல்லா கொதிக்க விடவும். இறக்கிய பின் மல்லி இழை போட்டு பரிமாறவும்.

குறிப்புகள்: